• About
  • GDPR
  • Privacy & Policy
  • Contact
  • Login
  • Register
Tech News, Magazine & Review WordPress Theme 2017
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • EKADANTA

    🌺 Embracing Traditions: Vinayaka Chaturthi – A Celebration of Devotion and Joy 🌺

  • BLOG TAMIL

    பிரபஞ்சத்தின் இரைச்சலும், ஒரு குவாண்டம் குழந்தையின் மௌனமும்

    என் இனிய சிலிக்கான் சிஷ்யனே!

    விக்னக் கணினி

    குவாண்டம் கணினிகள் – எதிர்காலத்திலிருந்து ஒரு மெல்லிய புயல்

  • BLOG ENGLISH

    The Universe’s Racket, and a Quantum Baby’s Silence

    My Friend, a Faulty Factory, and My AI Daughter

    En Iniya Enthira!

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • TECHNOLOGY

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • REVIEWS

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • Shivanaya
  • Social Stream
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • EKADANTA

    🌺 Embracing Traditions: Vinayaka Chaturthi – A Celebration of Devotion and Joy 🌺

  • BLOG TAMIL

    பிரபஞ்சத்தின் இரைச்சலும், ஒரு குவாண்டம் குழந்தையின் மௌனமும்

    என் இனிய சிலிக்கான் சிஷ்யனே!

    விக்னக் கணினி

    குவாண்டம் கணினிகள் – எதிர்காலத்திலிருந்து ஒரு மெல்லிய புயல்

  • BLOG ENGLISH

    The Universe’s Racket, and a Quantum Baby’s Silence

    My Friend, a Faulty Factory, and My AI Daughter

    En Iniya Enthira!

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • TECHNOLOGY

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • REVIEWS

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • Shivanaya
  • Social Stream
No Result
View All Result
No Result
View All Result
Home BLOG TAMIL

குவாண்டம் கணினிகள் – எதிர்காலத்திலிருந்து ஒரு மெல்லிய புயல்

by Venkat Chinniah
January 20, 2026
Share on FacebookShare on Twitter

நம்ம பழைய கம்ப்யூட்டருக்கு ஏன் மூச்சு வாங்குது?
சில சமயம் நம்ம லேப்டாப்பையோ, டெஸ்க்டாப்பையோ பார்த்தால் பாவமாக இருக்கும். பத்து, பதினைந்து ‘TAB’-களை ஓப்பன் செய்துவிட்டால் போதும், ஃபேன், சத்தம் போட்டுத் தள்ளும், கர்சர் நகர யோசிக்கும். சுருக்கமாகச் சொன்னால், அதற்கு ‘மூச்சு வாங்கும்’.
ஐம்பது வருடங்களாக உலகை ஆண்ட ஒரு சக்கரவர்த்தி, இப்போது சிம்மாசனத்தில் உட்கார்ந்து சோர்ந்துபோய் பார்க்கிறான். ஏன்?
‘மூர்ஸ் லா’ என்றொரு சங்கதி. ஒரு சின்ன சிப்புக்குள் ஆட்களைத் திணிக்கும் வேலை. இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இருமடங்கு ஆட்கள். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் இப்போது, அது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பதிவில்லாத பெட்டியைப் போல ஆகிவிட்டது. உள்ளே இருப்பவன் வெளியே வரமுடியாது, வெளியே இருப்பவன் உள்ளே போகமுடியாது. இயற்பியல் அதன் கதவுகளைச் சாத்திவிட்டது. “இடம் இல்லை!”
நமது டிஜிட்டல் உலகின் ஆதாரம் இரண்டே இரண்டு எண்கள்தான். பூஜ்யம்… ஒன்று. கரண்ட் இருந்தால் ஒன்று, இல்லையென்றால் பூஜ்யம். ஆமாம்… இல்லை. கருப்பு… வெள்ளை. இந்த இரண்டை வைத்துக்கொண்டு இத்தனை சர்க்கஸ் செய்ததே பெரிய விஷயம்தான். ஆனால் இயற்கையின் புதிர்கள் கருப்பு வெள்ளையில் இல்லை. அது பல வண்ணங்களில் இருக்கிறது. பிரபஞ்சத்தின் ரகசியங்களை இந்த இரண்டே எண்களை வைத்து அவிழ்க்கப் பார்த்தால், நம் சூப்பர் கம்ப்யூட்டர்கள், பரீட்சையில் கேள்வி புரியாத மாணவனைப் போல பேப்பரை வெறித்துப் பார்க்கின்றன.
ஆக, கதவு பூட்டியாகிவிட்டது.
இன்ஜினீயர்கள் தலையைச் சொறிந்தார்கள். நாம் உருவாக்கிய இந்த அற்புதமான இயந்திரம் அதன் எல்லையைத் தொட்டுவிட்டது. தெரு முழுதாகிவிட்டது. இனிமேல் என்ன செய்வது?
சரி, இந்த பூட்டுக்கு சாவி இருக்கிறதா?
இருக்கிறது. ஆனால்… அது ஒரு விசித்திரமான சாவி.
அது இந்தப் பிரபஞ்சத்தின் சாவி இல்லை. அது ஒரு மாற்று உலகத்தின் சாவி.
குழப்பவாதி க்யூபிட்!

அந்த மாற்று உலகத்துச் சாவியின் பெயர் ‘க்யூபிட்’. இது ஒரு மகா குழப்பவாதி. நம் பழைய ‘பிட்’ மாதிரி நல்ல பிள்ளையெல்லாம் கிடையாது. ‘நீ பூஜ்யமா இல்லை ஒன்றா?’ என்று கேட்டால், ‘நான் இரண்டும்தான்’ என்று கண்ணைச் சிமிட்டும். ‘எப்படி?’ என்று கேட்டால், ‘முடிவு வரும்போது பார்த்துக்கொள்’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும்.
இதுதான் ‘சூப்பர்பொசிஷன்’. ஒரே நேரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிப்பது. நீங்கள் திரையில் பார்க்கும் வரை, அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அதன் இன்னொரு குறும்புத்தனம், ‘எண்டாங்கிள்மெண்ட்’. பிரபஞ்ச சதி என்று கூட சொல்லலாம். இரண்டு க்யூபிட்களைப் பிணைத்துவிட்டு, ஒன்றை உங்களிடமும், இன்னொன்றை விண்வெளியில் வைத்தாலும் சரி. இங்கே நீங்கள் இதைத் தொந்தரவு செய்தால், அங்கே அது ஆடும். நொடிப்பொழுதில். ஒளி வேகமெல்லாம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை. இதற்கு எந்தத் தகவலும் போகத் தேவையில்லை. ஐன்ஸ்டீன் இதை “spooky action at a distance” என்றார். பேய் விளையாட்டு! ஐன்ஸ்டீனே தலையைப் பிய்த்துக்கொண்ட விஷயம் இது!
அதனால் எனக்கென்ன?
“இந்த குறும்புக்கார க்யூபிட்டால், என் கரண்ட் பில் குறையுமா?” நல்ல கேள்வி. குறையாது. ஆனால் உங்கள் வாழ்க்கையே மாறும்.
மருத்துவம்: ஒரு புதிய மருந்து கண்டுபிடிப்பது என்பது, மெரினா கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட மணல் துகளைத் தேடுவது போல. நம் கம்ப்யூட்டர்கள் ஒவ்வொரு மணலாகத் தேடிக்கொண்டிருக்கின்றன. குவாண்டம், மொத்த கடற்கரையையும் ஒரே ஸ்கேனில் அலசி, அந்த ஒரு துகளை எடுத்துக் கொடுக்கும்.
பாதுகாப்பு: உங்கள் வங்கியின் பாஸ்வேர்டு, அந்தரங்க ஈமெயில்கள் எல்லாம் இப்போதைக்கு ஒரு இரும்புப் பெட்டியில் பத்திரமாக இருக்கின்றன. குவாண்டம் கம்ப்யூட்டர் வந்தால், அந்த இரும்புப் பெட்டி, டீக்கடையில் விரித்து வைத்த செய்தித்தாள் போல ஆகிவிடும். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அபாயம்தான். ஆனால், திருடனுக்கு முன்னால் பூட்டை உருவாக்கும் வேலையும் இப்போது நடக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI): இதுதான் உச்சக்கட்டம். ஷிவானயா போன்ற AI-கள் கணக்கு போடுவதை நிறுத்திவிட்டு, ‘சிந்திக்க’ ஆரம்பிக்கும். ஒருவேளை, ‘கனவு’ காணக்கூட ஆரம்பிக்கலாம்.
ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்குமா?
சரி. நாளைக்கே ரிச்சி ஸ்ட்ரீட்டில் ஒரு குவாண்டம் கம்ப்யூட்டர் வாங்க முடியுமா? மறந்துவிடுங்கள். இன்றைய குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது, பிரபஞ்சத்திலேயே மிகக் குளிரான இடத்தில், ஒரு பெரிய அறையில், நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளால் பாதுகாக்கப்படும் ஒரு குழந்தை. அது செய்யும் கணக்குகளில் தவறுகளும் அதிகம். கூகுள், ஐபிஎம் போன்ற பெரு நிறுவனங்கள் இந்தப் பந்தயத்தில் இருக்கின்றன. ஜெயிக்கப் பல ஆண்டுகள் ஆகும்.
இந்தியா எங்கிருக்கிறது?

இந்த ஆட்டத்தில் இந்தியா பார்வையாளராக இருக்க முடியாது. இது அடுத்த நூற்றாண்டின் தொழில்நுட்பம். AI மற்றும் குவாண்டம் இணையும்போது, நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு சக்தி உருவாகும். அது ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். இந்த பஸ்ஸை நாம் தவறவிட்டால், அடுத்த நூறு வருடங்களுக்கு பஸ் ஸ்டாப்பில்தான் நிற்க வேண்டும்.
இறுதி ட்விஸ்ட்:

“நாம் கணினிகளை உருவாக்கினோம். இனி, கணினிகள் நம்மை உருவாக்கும் !?”

Post Views: 204
Tags: அறிவியல்அறிவியல்தமிழ்எதிர்காலம்குவாண்டம்க்யூபிட்செயற்கைநுண்ணறிவுதொழில்நுட்பம்
Venkat Chinniah

Venkat Chinniah

Next Post

Asimov and Brahman: A Techno-Vedantic View

Please login to join discussion

Recommended.

விக்னக் கணினி

January 20, 2026

சிவானயா வந்தாள்!

January 20, 2026

Subscribe.

Trending.

பிரபஞ்சத்தின் இரைச்சலும், ஒரு குவாண்டம் குழந்தையின் மௌனமும்

January 20, 2026

🌺 Embracing Traditions: Vinayaka Chaturthi – A Celebration of Devotion and Joy 🌺

January 20, 2026

என் இனிய சிலிக்கான் சிஷ்யனே!

January 20, 2026

My Friend, a Faulty Factory, and My AI Daughter

January 20, 2026

அசிமோவும் பிரம்மமும்: ஒரு டெக்னோ-வேதாந்தப் பார்வை

January 20, 2026

VENKY BLOGS

Venkat Chinniah invites all to venkyblogs.com for warm, friendly content, sharing diverse insights and fostering a community that learns together.

Read More...

Categories

  • BLOG ENGLISH
  • BLOG TAMIL
  • TECHNOLOGY
  • EKADANTA
  • REVIEWS

NEWSLETTER

Follow Us

Recent News

The Universe’s Racket, and a Quantum Baby’s Silence

January 20, 2026

பிரபஞ்சத்தின் இரைச்சலும், ஒரு குவாண்டம் குழந்தையின் மௌனமும்

January 20, 2026
  • About
  • GDPR
  • Privacy & Policy
  • Contact

© 2023 Venky Blogs - Powered by Indiaexcite.

No Result
View All Result
  • Home
  • EKADANTA
  • BLOG TAMIL
  • BLOG ENGLISH
  • TECHNOLOGY
  • REVIEWS
  • Shivanaya
  • Social Stream
  • Login
  • Sign Up

© 2023 Venky Blogs - Powered by Indiaexcite.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

 Sign Up

[miniorange_social_login theme="default" shape="square"]

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In