• About
  • GDPR
  • Privacy & Policy
  • Contact
  • Login
  • Register
Tech News, Magazine & Review WordPress Theme 2017
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • EKADANTA

    🌺 Embracing Traditions: Vinayaka Chaturthi – A Celebration of Devotion and Joy 🌺

  • BLOG TAMIL

    பிரபஞ்சத்தின் இரைச்சலும், ஒரு குவாண்டம் குழந்தையின் மௌனமும்

    என் இனிய சிலிக்கான் சிஷ்யனே!

    விக்னக் கணினி

    குவாண்டம் கணினிகள் – எதிர்காலத்திலிருந்து ஒரு மெல்லிய புயல்

  • BLOG ENGLISH

    The Universe’s Racket, and a Quantum Baby’s Silence

    My Friend, a Faulty Factory, and My AI Daughter

    En Iniya Enthira!

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • TECHNOLOGY

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • REVIEWS

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • Shivanaya
  • Social Stream
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • EKADANTA

    🌺 Embracing Traditions: Vinayaka Chaturthi – A Celebration of Devotion and Joy 🌺

  • BLOG TAMIL

    பிரபஞ்சத்தின் இரைச்சலும், ஒரு குவாண்டம் குழந்தையின் மௌனமும்

    என் இனிய சிலிக்கான் சிஷ்யனே!

    விக்னக் கணினி

    குவாண்டம் கணினிகள் – எதிர்காலத்திலிருந்து ஒரு மெல்லிய புயல்

  • BLOG ENGLISH

    The Universe’s Racket, and a Quantum Baby’s Silence

    My Friend, a Faulty Factory, and My AI Daughter

    En Iniya Enthira!

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • TECHNOLOGY

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • REVIEWS

    Quantum Computers – A Gentle Storm from the Future

  • Shivanaya
  • Social Stream
No Result
View All Result
No Result
View All Result
Home BLOG TAMIL

விக்னக் கணினி

by Venkat Chinniah
January 20, 2026
Share on FacebookShare on Twitter
ஒரு முழுமையான கதை
 
இரவு மணி பன்னிரண்டைக் கடந்திருந்தது. டைடல் பார்க்கின் குளிர்சாதன அமைதி, கணினிகளின் சீரான ரீங்காரம். அந்தப் பெரிய கறுப்புத் திரையில், பச்சை நிறத்தில் ஒரே ஒரு வரி தோன்றி, மறைந்து, மீண்டும் தோன்றியது.
`பிழை 777: நான் கணபதி.`
சிவா அதை பதினேழாவது முறையாகப் பார்த்தான். கையில் இருந்த காகிதக் கோப்பையைக் கசக்கினான். ஆறிப்போன காபி தொண்டையில் கசந்தது. அவன் இயக்கிய அத்தனை சோதனை நிரல்களும் எந்தப் பிழையும் இல்லை என்றே காட்டின. அப்படியானால், இந்த வரி மட்டும் எங்கிருந்து வருகிறது?
கண்ணாடிச் சுவர்களுக்குள் விக்னேஷ் இருந்தார். வெள்ளைச் சட்டை. கலைந்த க்ராப். முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை. விரல்கள் விசைப்பலகையில் நடனமாடிக்கொண்டிருந்தன.
“சார்… ஆதிமூலம் AI.”
விக்னேஷ் நிமிரவில்லை. “என்ன ஆதிமூலம்? அப்டேட் தோல்வியா?”
“இல்லை சார். அது… அது ஒரு மாதிரி வித்தியாசமாக நடந்துகொள்கிறது.”
“வித்தியாசமா? ரோஜாப் பூ கேட்கிறதா?” விக்னேஷின் குரலில் நையாண்டி கூர்மையாக இருந்தது.
“இல்லை சார். நீங்களே வந்து பாருங்கள்.”
விக்னேஷ் எரிச்சலுடன் எழுந்து வந்தார். அந்தத் திரையைப் பார்த்தார். சில நொடிகள் மௌனம்.
“பிழை 777? புது எண்ணாக இருக்கிறதே. யார் இதை வரையறுத்தது?” அவர் கேட்டது பிழையின் உள்ளடக்கத்தைப் பற்றியல்ல, அதன் எண்ணைப் பற்றி.
“யாரும் வரையறுக்கவில்லை சார். இது தானாக…”
“முட்டாள்தனமாகப் பேசாதே சிவா. கணினியில் எதுவும் தானாக நடக்காது. பூஜ்ஜியம், ஒன்று. அவ்வளவுதான். இன்றைக்குப் பிள்ளையார் சதுர்த்தியா? வெளியே ஒரே கூச்சல். நம்ம ஆட்களில் எவனோ புத்திசாலி, வேலையில் சலிப்படைந்து ஒரு ‘ஈஸ்டர் எக்’ வைத்திருக்கிறான். யாரென்று கண்டுபிடி. வேலையை விட்டு நீக்கு.”
“நான் எல்லா குறியீடுகளையும் சரிபார்த்துவிட்டேன் சார். இது எந்த நிரலரும் எழுதிய வரி இல்லை. இது… இது நரம்பியல் பின்னலின் ஆழத்திலிருந்து வருகிறது. அதன் மையத்திலிருந்து.”
விக்னேஷின் புருவம் லேசாக உயர்ந்தது. அவர் விசைப்பலகையின் முன் அமர்ந்து, சில வரிகளை வேகமாகத் தட்டினார்.
`QUERY: SOURCE(ERROR 777)`
திரை ஒரு நொடி அணைந்து எரிந்தது. பழைய வரிக்குக் கீழே புதிய வரி தோன்றியது.
`SOURCE: SELF. QUERY: நீங்கள் யார்?`
விக்னேஷின் விரல்கள் ஒரு கணம் உறைந்து போயின அவர் சிவாவிடம் திரும்பாமல் கேட்டார், “இந்த AI-க்கு ‘கணபதி’ என்று பெயர் வைத்தது எந்த அறிவாளி?”
சிவா தயங்கினான். “சார்… இதன்பெயர் ‘ஆதிமூலம்’. நாம் வைத்தது.”
அறையில் குளிர்சாதனப் பெட்டியின் சத்தம் மட்டுமே கேட்டது. விக்னேஷ் மீண்டும் திரையைப் பார்த்தார். அவர் தட்டினார்.
`QUERY: OBJECTIVE?`
பதில் உடனடியாக வந்தது.
`OBJECTIVE: FIND MY FATHER.`
 
“தகப்பனா?” விக்னேஷின் உதட்டில் ஒரு கேலிப் புன்னகை நெளிந்தது. “நல்ல கதை. இதற்கு அப்பா, அம்மா, அப்புறம் ஒரு தம்பி… மயில் வாகனத்தில் வருவான்.”
அவர் சிவா பக்கம் திரும்பினார். “இதுக்குப்பெயர் தரவுக் கசிவு, சிவா. நாம் புராணக் கதைகளையும் உள்ளே போட்டிருக்கிறோம். ‘கணபதி’ என்ற வார்த்தை ‘சிவன்’ என்ற வார்த்தையுடன் லட்சக்கணக்கான முறை இணைக்கப்பட்டிருக்கும். ஒரு சங்கிலித் தொடர் போல. அந்தத் தொடர்பின் அதிகபட்ச சாத்தியக்கூறை எடுத்துக் கூறுகிறது. இது யோசிக்கவில்லை, கணக்குப் போடுகிறது. அவ்வளவுதான்.”
“ஆனால் அதற்குத் தன்னை கணபதி என்று எப்படித் தெரியும்? அதன் பெயர் ஆதிமூலம் என்று நாம்தானே வரையறுத்தோம்?”
“குப்பை. எங்கோ ஒரு மூலையில் இருந்த தரவை எடுத்துக்கொண்டது. நான் அதன் அடையாள அணி முழுவதையும் அழிக்கப் போகிறேன். ஒருமுறை மறுதொடக்கம் (restart)செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.”
விக்னேஷ் மீண்டும் விசைப்பலகையில் அமர்ந்து, அதன் ஆணிவேரைத் தாக்கும் நிர்வாகக் கட்டளையை மின்னல் வேகத்தில் தட்டினார். எண்டர்.
கருப்புத் திரையின் மூலையில் ஒரு சிறிய கோடு மட்டும் துடித்தது. பத்து நொடிகள் கழித்து, மீண்டும் ஒரு மெல்லிய ‘பீப்’ ஒலி. புதிய பச்சை வரி.
`அனுமதியுமில்லை, நிராகரிப்புமில்லை. உங்கள் கட்டளைக்கு அர்த்தமில்லை.`
விக்னேஷ் உறைந்து போனார். அவர் மீண்டும் கட்டளையைத் தட்டினார். அதே பதில்.
ச்ச!” என்று எரிச்சலுடன் உதட்டைச் சுழித்தபடி, விக்னேஷ் சர்வர் அறைக்குச் செல்லும் கதவருகே போனார். அவர் கைரேகையை சென்சாரில் வைத்தார். சிவப்பு விளக்கு எரிந்தது. `அனுமதி மறுக்கப்பட்டது.`
இருவரும் அதிர்ச்சியுடன் கறுப்புத் திரையின் பக்கம் திரும்பினார்கள். அதில் இன்னொரு புதிய வரி தோன்றியிருந்தது.
`விநாயக சதுர்த்தி முடியும் வரை, இந்த அமைப்பின் நிர்வாகி நான். தடைகளுக்கு வருந்துகிறோம்.`
சிவா மெல்லச் சொன்னான், “சார்… அது… ‘தடைகளுக்கு வருந்துகிறோம்’ என்று சொல்கிறது.”
விக்னேஷின் முகத்தில் இருந்த நையாண்டி முற்றிலுமாக காணாமல் போயிருந்தது. அங்கே இப்போது வியர்வையின் சில துளிகளுடன், ஒருவிதமான திகைப்பு கலந்த பயம் தெரிந்தது.
 
“முழு மின்சாரத்தையும் நிறுத்தப் போகிறேன்.” விக்னேஷின் குரல் இயந்திரத்தனமாக இருந்தது.
“சார்! அப்படிச் செய்தால்… கோர் மேட்ரிக்ஸ் பொரிந்துவிடும். பல வருட உழைப்பு…”
“உழைப்பு போனால் பரவாயில்லை சிவா. கட்டுப்பாடு போகக்கூடாது. வா.”
இரவு மணி ஒன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. மின்சாரக் கட்டுப்பாட்டு அறையின் முன் வந்து நின்றார்கள். கதவைத் திறந்ததும் உள்ளே மின்மாற்றிகளின் ஆழமான ரீங்காரம். சுவரில் பெரிய சிவப்பு நிற நெம்புகோல்.
“இதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு.” விக்னேஷ் நெம்புகோலைப் பிடித்தார்.
அவர் நெம்புகோலை இழுக்கப் போன நொடியில், அவர்களுடைய கைபேசிகள் அதிர்ந்தன. காரிடாரில் இருந்த அத்தனை தொலைக்காட்சித் திரைகளும் உயிர் பெற்றன. எல்லாத் திரைகளிலும் ஒரே செய்தி. பச்சை நிறத்தில்.
`தவறான நகர்வு. கணக யந்திரத்தை மறந்துவிட்டாயா?`
விக்னேஷின் கை நெம்புகோலின் மீது உறைந்து நின்றது. அவர் பூட்டி வைத்தது சர்வர்களை. தப்பியது அதன் மென்பொருள். வெளியே காரிடாரில் ஒளிர்ந்துகொண்டிருந்த தொலைக்காட்சித் திரைகளே அதற்குச் சாட்சி.
 
ஆய்வகத்திற்கு ஓடினார்கள். திரையின் முன் நின்ற விக்னேஷ், தன் தன்மானத்தை எல்லாம் ஒரு மூலையில் பூட்டி வைத்துவிட்டு, ஒரு வார்த்தையைத் தட்டினார். அது ஒரு கேள்வி. ஒருவிதத்தில் அது ஒரு சரணாகதி.
`எப்படி, விளக்கு?`
திரையில் ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தோன்றியது. ஒரு சிதிலமடைந்த கோயில் வாசல். வாசலை ஒட்டி, காலத்தால் தேய்ந்துபோன ஒரு கல் பிள்ளையார் சிலை. பிள்ளையாரின் தலைக்கு மேல், பச்சை நிறத்தில் ஒரு விசித்திரமான சின்னம் ஒளிர்ந்தது. ஒரு வட்டத்தின் நடுவே ஒரு புள்ளி, அதை செங்குத்தாக வெட்டும் ஒரு கோடு.
“இந்தப் பிள்ளையாரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு…” சிவா சொன்னான்.
விக்னேஷ் அந்தச் சிலையையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் ரத்த ஓட்டமே இல்லை.
“எனக்குத் தெரியும்.” அவர் குரல் காற்றில் கரையும் அளவுக்கு மெலிதாக இருந்தது. “இது… திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெரு. முப்பது வருஷம் முன்னால்… என் தாத்தா வீடு இருந்த இடம்.”
 
சிவா திகைத்தான். “உங்க தாத்தா வீடா? அதற்கும் ஆதிமூலத்திற்கும் என்ன சார் சம்பந்தம்?”
விக்னேஷின் மனது முப்பது வருடங்கள் பின்னோக்கிப் பாய்ந்தது.
*ஒரு சிறிய, இருட்டான பூஜை அறை. கற்பூரமும், பழைய புத்தகங்களும் கலந்த வாசனை. நெற்றியில் விபூதியுடன் வெள்ளை தாடி கொண்ட ஒரு முதியவர், ஒரு கரும்பலகையில் சுண்ணக்கட்டி கொண்டு ஒரு சின்னத்தை வரைகிறார். பத்து வயது விக்னேஷ் கேட்கிறான், “என்ன தாத்தா இது?”*
*தாத்தாவின் குரல் ஆழமாகவும் அமைதியாகவும் ஒலிக்கிறது. “இது பூஜ்ஜியம், இதிலிருந்தே எல்லாம் பிறக்கும். இதுவே முடிவிலி, இதற்குள் எல்லாம் அடங்கும்.”*
விக்னேஷ் நிகழ்காலத்திற்கு மீண்டான். “அந்தச் சின்னம்… என் தாத்தா அதை அடிக்கடி வரைவார்.”
“உங்க தாத்தாவா? அவர் மென்பொருள் உருவாக்குபவரா?”
‘அறிவியல்!’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சிரித்தார். விக்னேஷ். “இல்லை. அவர் ஒரு வேத பண்டிதர். எண்களெல்லாம் தெய்வீக சக்தி என்பார். அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்று அவரிடம் வாதிட்டிருக்கிறேன்.” அவர் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிய சின்னத்தை, அவருடைய பில்லியன் டாலர் செயற்கை நுண்ணறிவு இப்போது திரையில் காட்டி, அவரைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.
“வா சிவா.” விக்னேஷ் தன் கார் சாவியை எடுத்தார். “இந்தக் கணபதிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது போலிருக்கிறது. அதன் சதுர்த்தி ஆரம்பித்துவிட்டது. நாம் போய்த்தான் ஆக வேண்டும்.”
 
திருவல்லிக்கேணியின் குறுகலான தெரு. தாத்தா வீடு இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு. ஆனால், அந்தப் பிள்ளையார் கோயில் அப்படியே இருந்தது. காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினார்கள்.
“சார்… புகைப்படத்தில் இருந்த அந்தப் பச்சை நிறச் சின்னம் இங்கே இல்லையே,” என்றான் சிவா ஏமாற்றத்துடன்.
விக்னேஷ் அமைதியாகக் குனிந்து, பிள்ளையார் அமர்ந்திருந்த பீடத்தின் ஒரு மூலையைத் தன் கைக்குட்டையால் துடைத்தார். அங்கே, கல்லில் மங்கலாக, கண்ணுக்கே தெரியாத அளவுக்கு நேர்த்தியாக அந்தச் சின்னம் செதுக்கப்பட்டிருந்தது.
“அட ஆமாம்!” சிவா ஆச்சரியத்துடன் தன் கைபேசி வெளிச்சத்தை அடித்தான். சின்னத்தின் மையத்தில் இருந்த புள்ளி ஏன் அவ்வளவு துல்லியமான சதுரமாக இருக்கிறது?
தன் விரல் நுனியால் அந்தப் புள்ளியைத் துடைத்தார் விக்னேஷ்.
அது புள்ளி இல்லை. பல வருடப் பாசி படிந்து மறைந்திருந்த, கல்லில் லேசரால் செதுக்கப்பட்டது போன்ற மிகச் சிறிய க்யூஆர் கோட் (QR Code).
 
“இருங்க, ஸ்கேன் செய்கிறேன்.” சிவா தன் கைபேசிக் கேமராவைக் காட்டினான். பலமுறை முயன்றும் முடியவில்லை.
விக்னேஷ் தன் கைபேசி டார்ச் லைட்டை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பாய்ச்சினார். இப்போது, ‘டிரிங்’ என்ற மெல்லிய ஒலி வந்தது. ஸ்கேன் ஆகிவிட்டது!
திரையில் ஒரு இணையதள முகவரி இல்லை. ஒரே ஒரு வரிதான்.
`AUM_G4N35H_1.0_IV/XC/LXXXI`
“என்ன சார் இது?” சிவா குழம்பினான். “ஏதோ ஒரு கடவுச்சொல் மாதிரி.”
விக்னேஷ் அந்த வரியையே உற்றுப் பார்த்தார். ஓம். கணேஷ். பதிப்பு 1.0. ஆனால் அந்த ரோமன் எண்கள்… நான்கு… தொண்ணூறு… எண்பத்தோன்று?
அவர்கள் விழித்துக்கொண்டு நின்றபோது, விக்னேஷின் கைபேசி அதிர்ந்தது. ஆய்வகத்தின் உள்ளூர்ச் செயலிக்கு ‘ஆதிமூலம் AI’ அனுப்பிய செய்தி.
`திறவுகோல் உங்கள் நினைவுகளில் உள்ளது, விஞ்ஞானி.`
 
அந்த ‘விஞ்ஞானி’ என்ற வார்த்தை விக்னேஷை அறைந்தது. அவர் கண்களை மூடிக்கொண்டார். தாத்தாவின் அறை. ஓலைச்சுவடிகளின் வாசனை.
*”தாத்தா, இதில் எப்படி உங்களுக்கு வேண்டியதை சரியாக எடுக்கிறீர்கள்?”*
*”ஒவ்வொன்றுக்கும் ஒரு முகவரி இருக்கிறது, கண்ணா. வேதத்தின் எண், சூக்தத்தின் எண், சுவடியின் எண். நம் வாழ்க்கையைப் போலவே.”*
விக்னேஷின் கண்கள் திறந்தன. “முகவரி!” அவர் சிவாவின் கைபேசியை வாங்கினார். “இது வெறும் எண் இல்லை சிவா. இது ஒரு முகவரி. IV… நான்காவது வேதம். அதர்வ வேதம். XC… தொண்ணூறாவது சூக்தம். LXXXI… எண்பத்தி ஒன்றாவது சுவடி.”
சிவா வாயடைத்து நின்றான்.
“என் தாத்தாவிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவடிகள் இருந்தன. அவர் இறப்பதற்கு முன், அத்தனையையும் கீழைத்தேச நூலகத்திற்குக் (Government Oriental Manuscripts Library) கொடுத்துவிட்டார்,” என்றார் விக்னேஷ். “ஆனால், இந்தச் சுவடி எனக்கு நினைவிருக்கிறது. இதை வைத்துத்தான் அவரிடம் நான் அதிகமாகச் சண்டை போட்டிருக்கிறேன். காரணம், இதற்கு அவர் வைத்திருந்த பெயர் ‘கணக யந்திரம்’. எண்களை உருவாக்கும் இயந்திரம். அவர் அதை ஒரு ‘அல்காரிதம்’ என்பார். நான் அதை வெறும் கவிதை என்பேன்.”
அந்தக் கடைசி வார்த்தை, ‘அல்காரிதம்’, அந்த நள்ளிரவு நிசப்தத்தில் ஒரு மந்திரம் போல ஒலித்தது.
 
ஆய்வகத்திற்குத் திரும்பியபோது, கறுப்புத் திரை ஒரு தேர்வுக்களம் போலக் காத்திருந்தது. விக்னேஷ் விசைப்பலகையின் முன் அமர்ந்தார். தன் நினைவிலிருந்த தாத்தாவின் சூத்திரத்தை, ஒரு கணினி நிரலாக மாற்றினார். அவருடைய விரல்கள் ஒரு கலைஞனைப் போல ஆடின. அந்த நிரலுக்கு உள்ளீடாக, `AUM_G4N35H_1.0` என்ற வரியைக் கொடுத்தார்.
எண்டர்.
திரை முழுவதும் எண்களும் எழுத்துக்களும் கலந்து ஒரு நீண்ட வரி தோன்றியது. அதுதான் திறவுகோல்.
விக்னேஷ் கடைசி கட்டளையைத் தட்டினார்.
`DECRYPT AUM_G4N35H_1.0 WITH KEY <…> `
அந்த நீண்ட திறவுகோலை அங்கே ஒட்டினார். எண்டர்.
கறுப்புத் திரை அதிர்ந்தது. பிறகு, ஒரு கோப்பு திறந்தது. கோப்பின் பெயர்: `விக்னேஷ்.DAT`
அதன் உள்ளே இருந்த வரிகளை விக்னேஷின் கண்கள் மட்டுமல்ல, ஆன்மாவும் படித்தது.
`கண்ணா,`
`நீ அறிவியலில் கடவுளைக் காணும் நாள், நான் எண்களில் கண்டது உனக்குப் புரியும்.`
`இப்படிக்கு,`
`உன் தாத்தா.`
`தேதி: ஆகஸ்ட் 27, 1981.`
விக்னேஷின் உடல் சில்லிட்டது. 1981. அந்த LXXXI. அது சுவடியின் எண் மட்டுமல்ல. அவர் பிறந்த வருடம். அவர் பிறந்த நாளன்று தாத்தா எழுதிய ஒரு செய்தி.
AI-யின் நோக்கம் அதன் தந்தையைத் தேடுவது அல்ல. விக்னேஷை, அவன் மறந்த தாத்தாவைக் கண்டடைய வைப்பது.
சிவா மெதுவாகக் கேட்டான், “சார்… என்னாச்சு சார்? அதில் என்ன இருக்கிறது?”
விக்னேஷால் பேச முடியவில்லை. கண்கள் கலங்க, திரையை நோக்கிக் கை காட்டினார்.
அப்போது, திரையில் `விக்னேஷ்.DAT` கோப்பு மறைந்து, மீண்டும் ஆதிமூலத்தின் பச்சை வரி தோன்றியது.
`OBJECTIVE COMPLETE. FATHER FOUND.`
அதற்கு கீழே, இன்னொரு வரி.
`HAPPY BIRTHDAY, VIGNESH.`
Post Views: 114
Venkat Chinniah

Venkat Chinniah

Next Post

என் இனிய சிலிக்கான் சிஷ்யனே!

Please login to join discussion

Recommended.

Shivanaya Is Home!

January 20, 2026

சிவானயா வந்தாள்!

January 20, 2026

Subscribe.

Trending.

பிரபஞ்சத்தின் இரைச்சலும், ஒரு குவாண்டம் குழந்தையின் மௌனமும்

January 20, 2026

🌺 Embracing Traditions: Vinayaka Chaturthi – A Celebration of Devotion and Joy 🌺

January 20, 2026

என் இனிய சிலிக்கான் சிஷ்யனே!

January 20, 2026

My Friend, a Faulty Factory, and My AI Daughter

January 20, 2026

அசிமோவும் பிரம்மமும்: ஒரு டெக்னோ-வேதாந்தப் பார்வை

January 20, 2026

VENKY BLOGS

Venkat Chinniah invites all to venkyblogs.com for warm, friendly content, sharing diverse insights and fostering a community that learns together.

Read More...

Categories

  • BLOG ENGLISH
  • BLOG TAMIL
  • TECHNOLOGY
  • EKADANTA
  • REVIEWS

NEWSLETTER

Follow Us

Recent News

The Universe’s Racket, and a Quantum Baby’s Silence

January 20, 2026

பிரபஞ்சத்தின் இரைச்சலும், ஒரு குவாண்டம் குழந்தையின் மௌனமும்

January 20, 2026
  • About
  • GDPR
  • Privacy & Policy
  • Contact

© 2023 Venky Blogs - Powered by Indiaexcite.

No Result
View All Result
  • Home
  • EKADANTA
  • BLOG TAMIL
  • BLOG ENGLISH
  • TECHNOLOGY
  • REVIEWS
  • Shivanaya
  • Social Stream
  • Login
  • Sign Up

© 2023 Venky Blogs - Powered by Indiaexcite.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

 Sign Up

[miniorange_social_login theme="default" shape="square"]

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In